சேவைகள்

இணை வழியிலான (CYBER) தாக்குதல்களில் இருந்து மென்பொருள் பயன்பாடுகளைப் பாதுகாத்தல்.

விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் இணைய வழியிலான அச்சுறுத்தல்களிலிருந்து மென்பொருள் பயன்பாடுகளைப் பாதுகாப்பதில் நாம் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுள்ளோம். உங்கள் பயன்பாடுகளில் சாத்தியமான பலவீனங்களைக் கண்டறிய, ஆழமான பாதிப்பு மதிப்பீடுகள், குறியீடு மதிப்புரைகள் மற்றும் ஊடுருவல் சோதனை ஆகியவற்றை நாங்கள் நடாத்துகிறோம். செயல்திறன் மிக்க பாதுகாப்பை மையமாகக் கொண்டு, உங்கள் மென்பொருள் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக மீள்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கு, வலுவான ஃபயர்வால்கள், ஊடுருவல் கண்டறிதல் அமைப்புகள் மற்றும் குறியாக்க நெறிமுறைகளை நாங்கள் செயல்படுத்துகிறோம். எமது நிபுணர்கள் சமீபத்திய பாதுகாப்பு போக்குகளுடன் கூடிய இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதானது, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் விரைவான சம்பவ பதிலை வழங்குவதற்கு எமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. எம்முடன் கூட்டுசேர்வதன் மூலம், உங்களது மென்பொருள் பயன்பாடுகளானவை உருவாகி வரும் இணைய வழியிலான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, உங்களின் பெறுமதிமிக்க தரவின் நேர்மைத்தன்மை மற்றும் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கின்றது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

  • மொபைல் பயன்பாடுகளுக்கான நலிவடைந்த தன்மை மிதான மதிப்பீடு – ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் ஹார்மனி
  • மென்பொருள் பயன்பாடுகள், இணைய வழியிலான பயன்பாடுகள் மற்றும் கட்டண வுமுறைகளுக்கான பாதிப்பு மதிப்பீடு
  • CBSL வழிகாட்டுதல்களின் கீழ் பணம் செலுத்துதல் தொடர்பான மொபைல் பயன்பாடுகளுக்கான VAPT
  • பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு
  • பாதுகாப்பு நிகழ்வுப் பதிலளிப்பு

 

பாதுகாப்பான வலையமைப்பு மற்றும் கிளவுட் உள்ளக கட்டமைப்பு

உங்கள் டிஜிட்டல் சொத்துகளின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உங்களின் வலையமைப்பு மற்றும் கிளவுட் உள்ளக கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். பாதிப்புகளைக் கண்டறிவதற்காக விரிவான பாதுகாப்பு மதிப்பீடுகளை வழங்குகுவதுடன் அவற்றை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை முறைமைகளினை வடிவமைக்கிறோம். வலுவான அங்கீகாரம் மற்றும் அணுகல் கட்டுப்பாட்டு வழிமுறைகள், மறைகுறியாக்கப்பட்ட தரவு பரிமாற்றம் மற்றும் நிகழ்நேர அச்சுறுத்தல் கண்டறிதல் அமைப்புகளை செயல்படுத்துவதில் எங்களிடம் மிகச் சிறந்த நிபுணத்துவம் உள்ளது. சிறந்த நடைமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் தரவு மீறல்களைத் தடுக்க ஃபயர்வால்கள், ரூட்டர்கள் மற்றும் கிளவுட் பாதுகாப்பு சேவைகளை உள்ளமைத்து கண்காணிக்கிறோம். எங்களுடன் கூட்டுசேர்வதன் மூலம், உங்களின் வலையமைப்பு மற்றும் கிளவுட் உள்ளக கட்டமைப்பு சாத்தியமான இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக வலுவூட்டப்பட்டுள்ளதாக நீங்கள் நம்பலாம், இது உங்களின் வர்த்தகத்தை நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் நடாத்துவதற்குப் பெரிதும் உதவுகின்றது.

  • உள்ளக மற்றும் வெளியக வலையமைப்பு நலிவடைதல் மீதான  மதிப்பீடுகள்
  • ஊடுருவல் சோதனை
  • கிளவுட் பாதுகாப்பு மீளாய்வுகள்
  • தந்தியல்லா வலையமைப்பு பாதுகாப்பு மீளாய்வுகள்
  • வலையமைப்பு கட்டிடக்கலை மீளாய்வுகள் 
  • ஃபயர்வால் விதி அடிப்படையிலான மீளாய்வுகள் 
  • திசைவிகள் மற்றும் சுவிட்சுகளின் உள்ளமைவு மீளாய்வுகள் 
  • சர்வர் அலுவலக முறைமை (OS) கட்டமைப்பு மீளாய்வுகள் 
  • தரவு நிலைய பௌதீக பாதுகாப்பு மீளாய்வுகள்

GRC – ஆளுகை இடர் மற்றும் இணக்கம்

பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளின் சிக்கலான வடிவமைப்பினூடாக செல்லுவதற்கு உங்கள் நிறுவனத்திற்கு உதவுவதற்கு, நிருவாகம், இடர் மற்றும் இணக்கம் (GRC) ஆகிய சேவைகளில் நாம் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்குப் பயனுள்ள கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை உருவாக்குவதற்கு உங்களுக்கு உதவுவதன் மூலம், GRC க்கு ஒரு முழுமையான அணுகுமுறையை நாங்கள் வழங்குகினடறோம். சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகளைத் தணிப்பதற்கு பெறுமதிமிக்க நுண்ணறிவுகளை வழங்கும், விரிவான இடர் மதிப்பீடுகளை எமது வல்லுநர்கள் நடாத்தி வருகின்றனர். இணக்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், கணக்காய்வுகளை எளிதாக்குதல் மற்றும் உங்களின் வர்த்தக இலக்குகளுடன் பாதுகாப்பு மூலோபாயங்களை சீரமைத்தல் ஆகியவற்றிலும் நாங்கள் உதவுகின்றோம். எமது GRC சேவைகள் மூலம், நீங்கள் நம்பிக்கையுடன் அபாயங்களை நிருவகித்துக் கொள்ளலாம், இணக்கத்தை நிரூபிக்கலாம் மற்றும் உங்களது நற்பெயரைப் பாதுகாக்கும் மற்றும் உங்கள் வர்த்தக வளர்ச்சியைத் தக்கவைக்கும் ஒரு நெகிழ்வான பாதுகாப்பு நிலைமையினையும் உருவாக்கலாம்.

  • தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மீளாய்வுகள்
  • தகவல் தொழில்நுட்ப இடர் மதிப்பீடுகள்
  • தகவல் பாதுகாப்பு கொள்கை செயல்முறை மேம்பாடு மற்றும் மீளாய்வு
  • தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமை  (ISMS) உள்ளக கணக்காய்வு
  • இணைய வழிப் பாதுகாப்பு தயார்நிலை மதிப்பீடுகள்
  • வியாபார தொடர்ந்தியங்கும் தன்மை மற்றும் பேரிடர் திட்ட மீட்பு மீளாய்வுகள்

டிஜிட்டல் தடயவியல்

டிஜிட்டல் தடயவியல் துறையிலும் நாம் நிபுணத்துவம் பெற்றுள்ளோம், டிஜிட்டல் ஆதாரங்களைக் கண்டறியவும் பகுப்பாய்வு செய்யவும் அதிநவீன விசாரணை சேவைகளை வழங்குகி வருகின்றோம். சிக்கலான இணைய சம்பவங்கள், தரவு மீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தீர்ப்பதில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நாங்கள் உதவி வருகின்றோம். எமது தடயவியல் வல்லுநர்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து டிஜிட்டல் தரவைப் பெற்றுக் கொள்வதற்கு, பாதுகாப்பதற்கு மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கு அதிநவீன கருவிகள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இணைய வழியிலான தாக்குதலின் மூலத்தைக் கண்டறிவது, நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுப்பது அல்லது சட்ட நடவடிக்கைகளில் நிபுணர்களின் சாட்சியங்களை வழங்குவது என எதுவாக இருந்தாலும், நாம் மிகவும் நம்பகமான மற்றும் வினைத்திறன் வாய்ந்த தீர்வுகளை வழங்கி வருகின்றோம். எமது டிஜிட்டல் தடயவியல் சேவைகள் மூலம், டிஜிட்டல் சம்பவங்கள் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம், தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த இணையப் பாதுகாப்பு நிலையையும் மேம்படுத்தலாம். 

  • போலியான கொடுப்பனவுச் சாதனங்கள் மீதான விசாரணைகள் (கொடுப்பளவுச் சாதன மோசடிச் சட்டத்தின்படி) 
  • மால்வேர் சம்பவங்கள் 
  • மின்னஞ்சல் தொடர்பான டிஜிட்டல் தடயவியல் விசாரணைகள் 
  • CCTV வீடியோ காட்சி விரிவாக்கல்கள் 
  • தரவு மீட்பு 
  • தரவு துடைத்தல்

ஊழியர்களின் தகவல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல்

தகவல் மற்றும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் உங்களின் ஊழியர்களை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். உங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் கைத்தொழில் நியமங்களுக்கு ஏற்ப விரிவான பயிற்சித் திட்டங்களை நாங்கள் வழங்கி வருகின்றோம். எமது பட்டறைகள் இணைய பாதுகாப்பு சிறந்த நடைமுறைகள், தரவு பாதுகாப்பு, சமூக பொறியியல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான குறியீட்டு முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. பயிற்சிகள் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் முறைகள் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை திறம்படக் கண்டறிந்து அவற்றிற்கு வினைத்திறனுடன் பதிலளிப்பதற்கான நிபுணத்துவத்துடன் உங்கள் ஊழியர்களை நாங்கள் நெறிப்படுத்துகின்றோம். எமது பயிற்சியின் மூலம், உங்களின் ஊழியர்கள் ஒரு வலிமையான தற்காப்பு அரணாக மாறி, மனிதர்கள் தொடர்பான பாதுகாப்பு மீறல்களின் அபாயத்தைக் குறைத்து, நிறுவனத்தினை முழுமையான  பாதுகாப்பு உணர்வு மிக்க கலாச்சாரத்தை வளர்க்கின்றார்கள். 

  • தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி 
  • இணையம் மற்றும் மின்னஞ்சல் பாதுகாப்பு 
  • சமூக ஊடக பாதுகாப்பு 
  • பிரயோக பாதுகாப்பு பயிற்சி 
  • தடயவியல் பயிற்சி 
  • இணைய வழிப் பயிற்சிகள் மற்றும் முதன்மை செயன்முறைகள்

இலங்கை கணினி அவசரகால தயார் நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம்

Copyright © 2023 SRI LANKA CERT | CC