வேறு யாரிடமாவது கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளுவது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது ஏன்?
கணக்கு உரிமை உங்களிடமிருந்து நீக்கப் படுவது மட்டுமின்றி உங்கள் பெயர், புகைப்படங்கள் தவறான முறையில் பயன்படுத்தப் படலாம்.
ஞாபகம் வைத்துக் கொள்ளவும்,
யாரேனும் ஒருவரிடம் உங்கள் கணக்கிற்கு நுழைவதற்கான கடவுச்சொல்லிருந்தால் உங்கள் கணக்கு அவர்கள் வசமிருக்கும்.இதனால் அறியப் படுவது யாதெனில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் பெயரிலே செயற் படுத்தப் படும்.இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்புக் கூற வேண்டும்.சில வேளைகளில் இவை பாரிய குற்றமாக கருதப்படும்.
உண்மையாகவே, நீங்கள் கடவுச்சொல்லை பகிர்ந்து கொண்ட நபரிடம் மாத்திரம் வரையறுக்கப்படாது – அவர்கள் அதனை சரியான முறையில் பாதுகாக்கா விட்டால் மூன்றாவது நபர் ஒருவர் உங்கள் விபரங்களை பயன்படுத்தி மோசமான செயல்களில் ஈடுபடலாம் என்பதால் உங்கள் கடவுச்சொல் தொடர்பாக அவதானமாக இருங்கள்.